ஜார்க்கண்டில் டிரக்- ஆட்டோ ரிக்‌ஷா மோதல்: 11 பேர் பலி, 5 பேர் காயம்


ஜார்க்கண்டில் டிரக்- ஆட்டோ ரிக்‌ஷா மோதல்: 11 பேர் பலி, 5 பேர் காயம்
x
தினத்தந்தி 14 Jan 2018 8:30 PM GMT (Updated: 14 Jan 2018 6:38 PM GMT)

ஜார்க்கண்ட் மாநிலம் கம்லா மாவட்டத்தில் டிரக்- ஆட்டோ ரிக்‌ஷா மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் பலியாகினர். #tamilnews

கம்லா,

ஜார்கண்ட் மாநிலம் கம்லா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 43-ல் டிரக்- ஆட்டோ ரிக்‌ஷா நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். பல்மடிபா என்ற கிராமம் அருகே இரவு 8.30 மணியளவில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணம் செய்தவர்களில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

படுகாயம் அடைந்த 5 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள உள்ளூர் போலீசார், விபத்துக்கான காரணம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews


Next Story