ஹஜ் மானிய ரத்தில் கிடைக்கும் பணத்தை இந்து மாணவிகள் படிப்பிற்கு பயன்படுத்துங்கள் - விஎச்பி


ஹஜ் மானிய ரத்தில் கிடைக்கும் பணத்தை இந்து மாணவிகள் படிப்பிற்கு பயன்படுத்துங்கள் - விஎச்பி
x
தினத்தந்தி 16 Jan 2018 8:27 PM IST (Updated: 16 Jan 2018 8:27 PM IST)
t-max-icont-min-icon

ஹஜ் மானிய ரத்தில் கிடைக்கும் நிதியை இந்து மாணவிகள் படிப்பிற்கு பயன்படுத்துங்கள் என விஸ்வ இந்து பரிஷத் கூறிஉள்ளது. #HajSubsidy #VHP #PravinTogadia


புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மத்திய அரசு ஹஜ் புனித பயணத்திற்கு வழங்கிய மானியத்தை ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட மானியத் தொகையானது பெண் குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஹஜ் மானிய ரத்தில் கிடைக்கும் நிதியை இந்து மாணவிகள் படிப்பிற்கு பயன்படுத்துங்கள் என விஸ்வ இந்து பரிஷத் கூறிஉள்ளது.

மத்திய அரசு ஹஜ் மானியத்தை ரத்து செய்ததை வரவேற்ற விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா, மிகவும் காலதாமதமான நல்ல முடிவு. இதில் கிடைக்கும் நிதியை ஏழை இந்து மாணவிகளின் கல்விக்கு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்துக்களின் கூட்டு வலியுறுத்தல் காரணமாக நேரிட்ட நகர்வாகும் எனவும் கூறிஉள்ளார். ராமர் கோவில் கட்டவும், பசு வதையை தடுக்கவும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம் எனவும் குறிப்பிட்டு உள்ளார். 
1 More update

Next Story