ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிர்ஷ்டவசமானது: அப்பலோ விளக்கம்


ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிர்ஷ்டவசமானது: அப்பலோ விளக்கம்
x
தினத்தந்தி 17 Jan 2018 4:35 PM GMT (Updated: 17 Jan 2018 4:35 PM GMT)

ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிர்ஷ்டவசமானது என்று அப்பலோ விளக்கம் அளித்துள்ளது. #Divakaran #JayalalithaaDeath

சென்னை,

அதிகாரபூர்வ அறிவிப்புக்கு ஒருநாள் முன்னதாக, அதாவது 2016–ம் ஆண்டு டிசம்பர் 4–ந் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியதாக தகவல்கள் வெளியாகின. ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் திவாகரன் கூறியதாக எழுந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது என்று அப்பலோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. 

2016 டிச.5-ம் தேதி ஜெயலலிதா மரணத்தை அறிவித்ததில் மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்பட்டன  எனவும், ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது எனவும் டிசம்பர் 5 ஆம் தேதி தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மையைதான் தெரிவித்து உள்ளோம் என்றும் அப்பல்லோ அறிவித்து உள்ளது.  

இதற்கிடையே, ஜெயலலிதா மரணம் பற்றிய தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக திவாகரனும் விளக்கம் அளித்து இருந்தார். 

Next Story