கர்நாடகாவில் தமிழில் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு


கர்நாடகாவில் தமிழில் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு
x
தினத்தந்தி 18 Jan 2018 1:15 PM GMT (Updated: 18 Jan 2018 1:15 PM GMT)

கர்நாடகாவில் மீண்டும் தமிழில் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டு உள்ளது. #Tamil #Bengaluru


பெங்களூரு, 

பெங்களூருவில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்டிருந்த தமிழ் பேனர்களை கன்னட அமைப்பினர் கிழிந்தெறிந்து உள்ளனர். 

கடந்த ஆகஸ்ட் மாதமும் பெங்களூரில், தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்தனர். ஆடி கிருத்திகை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரில் உள்ள புலகேஷிநகரில் தமிழில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பேனர்களை கர்நாடகா ரக் ஷண வேதிக் உறுப்பினர்கள் சிலர் கிழித்து எறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இப்போதும் அங்கு தமிழில் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story