அசாம் மாநிலத்தில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு


அசாம் மாநிலத்தில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
x
தினத்தந்தி 20 Jan 2018 2:57 AM GMT (Updated: 20 Jan 2018 2:57 AM GMT)

அசாம் மாநிலத்தில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது. #earthquake | #Assam

திஸ்பூர்,

அசாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் மாவட்டத்தில் இன்று காலை இலேசான நிலநடுக்கம்  உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. காலை 6.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன.

இதனால், பீதி அடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். கடும் குளிரிலும் மக்கள் தெருக்களில் கூடியதை காண முடிந்தது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் தற்போது வரை இல்லை.


Next Story