அரியனாவில் தனியார் பள்ளி பெண் முதல்வர் 12-ம் வகுப்பு மாணவரால் சுட்டுக்கொலை


அரியனாவில் தனியார் பள்ளி பெண் முதல்வர் 12-ம் வகுப்பு மாணவரால் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 20 Jan 2018 9:59 AM GMT (Updated: 20 Jan 2018 10:35 AM GMT)

அரியனாவில் தனியார் பள்ளி பெண் முதல்வர் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Haryana #Yamunanagar #shootsdead

சண்டிகர்,

அரியனா மாநிலம் யமுனாகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த பள்ளியின் பெண் முதல்வரை  அதே பள்ளியில் படிக்கும் 12-வகுப்பு மாணவர் தலைமை ஆசிரியர் என்று கூட பாராமல் காலை 11.30 மணி அளவில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக மாணவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்று குறித்தும் தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுகொல்லப்பட காரணம் ஏன்?  என்று போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அம்மாவட்ட எஸ்.பி.ராஜேஷ் காலியா தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர் ஒருவர் பெண் முதல்வரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story