ராகிங் கொடுமையால் ஓடும் ரெயில் முன் குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவர் ஓடும் ரெயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். #CollegeStudent
முசாபர்நகர்,
உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான மருத்துவ படிப்பு படித்து வந்த கல்லூரி மாணவர் சத்யம் குமார் (வயது 23).
இவர் தனது சக மாணவர்களால் ராகிங் செய்து கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்த நிலையில், அவர் ஓடும் ரெயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்னர் டைரி ஒன்றில் தனது முடிவிற்கான காரணம் பற்றி எழுதி வைத்து உள்ளார்.
ஓடும் ரெயில் முன் குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story