‘இம்பீச்மெண்ட் தீர்மானத்தை’ காங்கிரஸ் அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது அருண் ஜெட்லி


‘இம்பீச்மெண்ட் தீர்மானத்தை’ காங்கிரஸ் அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது அருண் ஜெட்லி
x
தினத்தந்தி 20 April 2018 12:20 PM GMT (Updated: 20 April 2018 12:22 PM GMT)

‘இம்பீச்மெண்ட் தீர்மானத்தை’ காங்கிரஸ் அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது என அருண் ஜெட்லி விமர்சனம் செய்து உள்ளார். #ImpeachmentMotion #Jaitley

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மிஸ்ராவிற்கு எதிரான ‘இம்பீச்மெண்ட் தீர்மானத்தை’ கொண்டு வருவது தொடர்பான நோட்டீஸை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் கொடுத்து உள்ளது.  ‘இம்பீச்மெண்ட் தீர்மானத்தில்’ காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் எம்.பி.க்கள் கையெழுத்திட்டு உள்ளார்கள். இந்நிலையில் ‘இம்பீச்மெண்ட் தீர்மானத்தை’ காங்கிரஸ் அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது என அருண் ஜெட்லி விமர்சனம் செய்து உள்ளார். 

நீதிபதி லோயா மரணம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு போலியான பிரசாரத்தை பொதுமக்கள் மற்றும் அரசியலில் உருவாக்க மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு சதிதிட்டத்தின் உண்மையையும் அம்பலப்படுத்துகிறது என குறிப்பிட்டு உள்ளார் அருண் ஜெட்லி. சொராபுதீன் என்கவுன்ட்டரில் அமித் ஷாவின் பங்கு எதுவும் கிடையாது எனவும் குறிப்பிட்டு உள்ளார். காங்கிரஸ் மற்றும் 6 எதிர்க்கட்சிகளின் இன்பீச்மெண்ட் தீர்மானம் தொடர்பாக பேஸ்புக்கில் கருத்தை பதிவு செய்து உள்ள அருண் ஜெட்லி, காங்கிரஸ் மற்றும் அதனுடைய நட்பு கட்சிகள் இம்பீச்மெண்ட் வாய்ப்பை அரசியல் கருவியாக பயன்படுத்த தொடங்கி உள்ளது என விமர்சனம் செய்து உள்ளார். 

தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான இம்பீச்மெண்ட்  அதிகாரத்தை பயன்படுத்துவது ஆபத்தான நிகழ்வு எனவும் நீதிபதியை அச்சுறுத்தும் செயல் எனவும் எங்களுடன் ஒத்துப்போகவில்லை என்றால் 50 எம்.பி.க்களை கொண்டு பழிவாங்குவோம் என பிற நீதிபதிகளுக்கு  தகவல் அனுப்பும் செயல் எனவும் அருண் ஜெட்லி விமர்சனம் செய்து உள்ளார்.  

Next Story