விலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்


விலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்
x
தினத்தந்தி 20 April 2018 10:45 PM GMT (Updated: 20 April 2018 8:54 PM GMT)

விலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என பெட்ரோலிய மந்திரி வலியுறுத்தினார்.

பாட்னா,

சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்தபோதிலும், அதன் வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படவில்லை. வழக்கம்போல், அப்பொருட்கள் மீது உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரி ஆகியவையே விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், பாட்னாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதற்கு சிரியா நிலவரமும், ஈரான் மீதான அமெரிக்காவின் அச்சுறுத்தலுமே காரணங்கள்.

இதுபற்றி மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. விலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். இதனால் வருவாய் இழப்பு ஏற்படும் என்று மாநில அரசுகள் அஞ்சுகின்றன. இருந்தாலும், தங்கள் மனதை தயார்படுத்த தொடங்கி உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story