4 மாநிலங்களுக்கு பேரழிவு நிவாரண நிதியாக ரூ. 1161 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு


4 மாநிலங்களுக்கு பேரழிவு நிவாரண நிதியாக ரூ. 1161 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 14 May 2018 9:37 AM GMT (Updated: 14 May 2018 9:37 AM GMT)

இயற்க்கைச்சீற்றங்களால் பாதிக்கப்பட்ட 4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்திற்கு பேரழிவு நிவாரண நிதியாக ரூ. 1161.17 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. #GovtSanctions

புதுடெல்லி,

நாட்டின் பல மாநிலங்களை புரட்டிப்போட்ட இயற்க்கைச்சீற்றங்களான வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்திற்கு பேரழிவு நிவாரண நிதியாக ரூ. 1161.17 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்டகுழுவில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அறிக்கை வெளியீட்டை குறித்து மத்திய செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ”வறட்சியால் பாதிக்கப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரூ. 526.14 கோடியும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சிக்கிம் ரூ. 67.40 கோடி மற்றும் இமாச்சலபிரதேச மாநிலத்திற்கு ரூ. 84.60 கோடியும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு ரூ. 480.87 கோடியும் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளுக்கு ரூ. 2.16 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிக்கையில் இடம் பெற்றிருந்தது” எனக் கூறினார். 



Next Story