பெண்களால் செயல்படும் முதல் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம்; மத்திய மந்திரியால் தொடங்கி வைக்கப்பட்டது


பெண்களால் செயல்படும் முதல் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம்; மத்திய மந்திரியால் தொடங்கி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 14 May 2018 6:45 PM IST (Updated: 14 May 2018 7:06 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாபில் பெண்களால் செயல்படும் முதல் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் மத்திய மந்திரியால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. #PostOfficePassportSevaKendra

பக்வாரா,

பஞ்சாபில் பக்வாரா நகரில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மத்திய மந்திரி விஜய் சம்ப்லா அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தினை இன்று தொடங்கி வைத்துள்ளார்.

நாட்டின் 192வது அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் ஆக செயல்படும் இதில் அனைத்து ஊழியர்களும் பெண்களாக பணியாற்றுகின்றனர்.  இதுபற்றி மந்திரி சம்ப்லா கூறும்பொழுது, பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கும் என கூறியுள்ளார்.

ஜலந்தர் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கில் கூறும்பொழுது, பாஸ்போர்ட் துறையின் ஆய்வு அதிகாரி மாதுரி பவி தலைமையில் பக்வாரா மையம் இயங்கும்.  அஞ்சலக உதவியாளர்களாக இரு பெண்  ஊழியர்கள் செயல்படுவர் என கூறியுள்ளார்.  ஜலந்தர் அலுவலகத்தில் பாஸ்போர்ட்டுகள் பிரிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படும்.

1 More update

Next Story