கர்நாடகத்தில் வெற்றி: பாஜக ஆட்சி செய்யும் மாநிலம் 21 ஆக உயர்வு

கர்நாடக தேர்தலில் 1 மணி நிலவரப்படி பாரதீய ஜனதா- 110 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 70 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் - 40 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
பெங்களூரு
கர்நாடக தேர்தல் வெற்றி மூலம் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் மாநிலம் 21 ஆக அதிகரித்துள்ளது.
அதே சமயத்தில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை 4-ல் இருந்து 3-ஆக குறைந்துள்ளது.
பா.ஜ.க. ஆட்சி நடக்கும் 21 மாநிலங்களில் 14 மாநிலங்களில் பா.ஜ.க. முதல் மந்திரிகள் ஆட்சி நடத்துகிறார்கள். இந்த 14 மாநிலங்களில் 10 மாநிலங்களில் பா.ஜ.க. தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்துவது குறிப்பிடத்தக்கது. அந்த 10 மாநிலங்கள் விபரம் வருமாறு:-
அருணாசலபிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், அரியானா, இமாச்சலபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் தற்போது கர்நாடக மாநிலமும் சேர உள்ளது.
6 மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் உதவியுடன் பா.ஜ.க. ஆட்சி நடத்தி வருகிறது.
அசாம் (அசாம் கன பரிஷத், போடடோ லேண்ட் கட்சிகள் ஆதரவு),கோவா (கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டி ராவாடி கோமந்தக் கட்சிகள் ஆதரவு), ஜார்க்கண்ட் (அகில ஜார்க்கண்ட் மாணவர்கள் யூனியன் ஆதரவுடன்), மராட்டியம் (சிவசேனா ஆதரவுடன்) மணிப்பூர் (நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி மற்றும் லோக் ஜனசக்தி ஆதரவுடன்) திரிபுரா (திரிபுரா மக்கள் முன்னணி)
பாரதீய ஜனதா கட்சி ஆதரவுடன் 5 மாநிலங்களில் பிற கட்சிகளின் ஆட்சி
நடக்கிறது. பீகார் (ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆதரவு), காஷ்மீர் (மக்கள் ஜன நாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சிக்கு பா.ஜ.க. ஆதரவு), நாகலாந்து (நாகா மக்கள் முன்னணிக்கு ஆதரவு) சிக்கிம் (சிக்கம் ஜன நாயக முன்னணிக்கு ஆதரவு) மேகலயா( தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு)
காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் பஞ்சாப், மிசோரம், புதுச்சேரி.
தமிழ்நாடு- அ.தி.மு.க, ஆந்திரா, தெலுங்கு தேசம், கேரளா ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு) மேற்கு வங்காளம் (திரிணாமுல் காங்கிரஸ்) ஒடிசா (பிஜூ ஜனதாதளம்) தெலுங்கானா (தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி)
Related Tags :
Next Story