மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை; மத்திய அரசு


மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை; மத்திய அரசு
x
தினத்தந்தி 15 May 2018 9:12 AM GMT (Updated: 15 May 2018 9:12 AM GMT)

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை என அரசு தெரிவித்துள்ளது. #CentralGovernmentEmployees #AadhaarCard

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்த நிலைக்குழு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய அரசு அதிகாரிகளுக்கான இணை மந்திரி ஜிதேந்திரா சிங், வங்கிகளுக்கு செல்லும் அவசியம் இல்லாமல், சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி கொள்வதற்கான கூடுதல் வசதிக்காக ஆதார் அட்டை உள்ளது.

அதனால் ஓய்வூதியம் பெற ஆதார் அட்டையானது மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாயமில்லை என கூறினார்.  நாட்டில் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61.17 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்கள் உள்ளனர்.

ஆதார் அட்டையானது 12 இலக்க எண்களுடன், ஒரு நபரின் அடையாளம் மற்றும் முகவரி சான்றாக செயல்படுகிறது.


Next Story