காங்கிரஸ் ஆதரவை ஏற்றுக்கொள்கிறோம் ஆளுநரை சந்திக்க அனுமதி கோரி மதசார்பற்ற ஜனதா தளம் கடிதம்

காங்கிரஸ் ஆதரவை ஏற்றுக்கொள்கிறோம் என குறிப்பிட்டு உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் ஆளுநரை சந்திக்க கடிதம் எழுதி உள்ளது. #KarnatakaElections2018 #Congress #Kumaraswamy
பெங்களூரு,
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு அளித்துவிட்டது. இப்போது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கடிதம் எழுதி உள்ளார், அதில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் அளிக்கும் ஆதரவை ஏற்றுக்கொள்கொறோம், உங்களை சந்திக்க நேரம் கோருகிறோம், மாலை 5:30 முதல் 6:00 மணிவரையில் அனுமதி அளிக்க கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே முழு முடிவுகள் வெளியான பின்னரே கவர்னர் முடிவை தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுவரையில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை.
Related Tags :
Next Story