கர்நாடக மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடுவேன் - ராகுல் காந்தி


கர்நாடக மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடுவேன் - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 15 May 2018 11:15 PM GMT (Updated: 15 May 2018 8:59 PM GMT)

கர்நாடக மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடுவேன் என்று நன்றி அறிவிப்பில் ராகுல் காந்தி உருக்கம். #RahulGandhi

புதுடெல்லி,

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவை விட காங்கிரஸ் குறைந்த இடங்களையே பெற்றது. இந்நிலையில் கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக குறிப்பிட்டு உள்ளதாவது:–

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தந்து, வாக்களித்த கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்கள் நலனுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்.

இதேபோல் தேர்தலுக்காக ஒருங்கிணைந்து ஓய்வு இல்லாமல் கடினமாக உழைத்த காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story