ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி


ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி
x
தினத்தந்தி 16 May 2018 1:27 AM GMT (Updated: 16 May 2018 1:27 AM GMT)

ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்தில் 17 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். #AndraPradesh

நகரி, 

கோதாவரி ஆற்றில் தேவிபட்டினத்தில் இருந்து மாடப்பள்ளி செல்லும் ஒரு படகில் போலாவரம் பகுதியை சேர்ந்த 40 பேர் நேற்று மாலை பயணம் செய்தனர். அப்போது சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது. இதனால் அந்த படகு தள்ளாடியது.

இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக படகு திடீரென கவிழ்ந்தது. அப்போது படகில் இருந்த 7 ஆண்கள் மட்டும் கரைக்கு நீந்தி வந்தனர். படகில் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 33 பேரின் நிலை என்ன ஆனது என்று தெரியாத நிலையில் தகவல் அறிந்த ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு உடனடியாக மீட்பு பணி நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து 22 படகுகளில் மீட்பு படையினர் சென்று மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிழக்கு கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் 2 ஹெலிகாப்டர்கள் உதவியுடன் படகில் காணாமல் போனவர்களை தேடி வந்தனர். 

இதனிடையே காணாமல் போனவர்களில் 17 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். படகில் சிக்கிய மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வரும் நிலையில் மேலும் பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுவதால் அப்பகுதி முழுவதும் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

Next Story