பாரதீய ஜனதா கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும், மக்கள் எங்களுடன் உள்ளனர் -பிரகாஷ் ஜவடேகர்


பாரதீய ஜனதா கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும், மக்கள் எங்களுடன் உள்ளனர் -பிரகாஷ் ஜவடேகர்
x
தினத்தந்தி 16 May 2018 5:50 AM GMT (Updated: 16 May 2018 5:50 AM GMT)

பாரதீய ஜனதா கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும். கர்நாடக மக்கள் எங்களுடன் உள்ளனர் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார்.

பெங்களூர்

மதசார்பற்ற ஜனத தள தலைவர் குமாரசாமியுடன் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சந்திப்பு பாஜகவுக்கு ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

பாரதீய ஜனதா கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும்.  கர்நாடக மக்கள் எங்களுடன் உள்ளனர்.

மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை தோல்வி அடைந்து விட்டன.  இரண்டு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படுவதை எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை.

மக்கள் பாரதீய ஜனதா  அரசாங்கத்தை விரும்புகின்றனர் மற்றும் நாங்கள் அதை செய்வோம். யாரும் இயற்கைக்கு மாறான அழுத்தங்களை உருவாக்க கூடாது. கூட்டத்திற்குப் பிறகு, தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். காங்கிரஸ் பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க நினைப்பது தவறு என்று கூறினார்.

Next Story