பாஜகவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரவே விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

கா்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநா் அழைத்ததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரவே விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. #Congress #Yeddyurappa
கர்நாடகா,
கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தாா். பின்னர் பதவியேற்பு நாளில் இருந்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடா்ந்து கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது, காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தை அணுகி மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இந்த முறையீட்டை விசாாிக்க உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதியும் பதிவாளரும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த மனுவை இரவே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தி வருகின்றனா்.
Related Tags :
Next Story