உ.பி.யில் பாலம் இடிந்து உயிர்ப்பலிகள்: அதிகாரிகள் மீது போலீஸ் வழக்கு


உ.பி.யில் பாலம் இடிந்து உயிர்ப்பலிகள்: அதிகாரிகள் மீது போலீஸ் வழக்கு
x
தினத்தந்தி 17 May 2018 4:30 AM IST (Updated: 17 May 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் ஒன்று நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது.

வாரணாசி,

30 பேர் இதில்  பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிகாரிகள் 18 பேர் பலியானதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத், வாரணாசிக்கு நேற்று சென்றார். பால விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களை ஆஸ்பத்திரியில் சந்தித்து அவர் நலம் விசாரித்தார். அப்போது அவர் இந்த விபத்தில் 15 பேர் பலியானதாக தெரிவித்தார்.

இதற்கு இடையே பாலம் இடிந்து விழுந்ததில், அலட்சியப்போக்குடன் செயல்பட்டதாக உத்தரபிரதேச மாநில பால கழகத்தின் அதிகாரிகள் மீது சிக்ரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

உயர்மட்ட விசாரணைக்கு முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ள நிலையில் மாஜிஸ்திரேட்டு விசாரணை தொடங்கி உள்ளது.

1 More update

Next Story