தேசிய செய்திகள்

இந்தியாவின் தூய்மையான நகரங்களில் பட்டியலில் போபால், சண்டிகர், இந்தூர்: ஆய்வில் தகவல் + "||" + Indore, Bhopal & Chandigarh cleanest cities in India: Survey

இந்தியாவின் தூய்மையான நகரங்களில் பட்டியலில் போபால், சண்டிகர், இந்தூர்: ஆய்வில் தகவல்

இந்தியாவின் தூய்மையான நகரங்களில் பட்டியலில் போபால், சண்டிகர், இந்தூர்: ஆய்வில் தகவல்
இந்தியாவின் தூய்மையான நகரங்களில் பட்டியலில் போபால், சண்டிகர், இந்தூர் ஆகியவை இடம் பிடித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் தூய்மையாக இருக்கும் நகரங்கள் குறித்து மத்திய அரசு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புறத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி வெளியிட்டார்.

இந்த பட்டியலில் இந்தூர், போபால், சண்டிகர், ஆகிய நகரங்கள் தூய்மையான நகரங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 லட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட நகராட்சிகளின் பட்டியலில் புதுடெல்லி முதல் இடம் பிடித்துள்ளது.

அதே போன்று மாநில தலைநகரங்களின் பட்டியலில் மும்பை முதல் இடம் வகிக்கிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களில் விஜயவாடா முதல் இடத்திலும்,  தூய்மை நகரங்களின் பட்டியலில் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள்தொகை கொண்ட பட்டியலில் மைசூரு நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.