நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா

நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா உறுதிபட தெரிவித்து உள்ளார். #Yeddyurappa
பெங்களூரு,
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட எடியூரப்பா கூறியதாவது:-
“ நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என நான் உறுதியாக கூறுகிறேன். எனது அரசு ஐந்து ஆண்டு காலத்தை நிச்சயம் பூர்த்தி செய்யும். எனக்கு மக்கள் ஆதரவும் எனது கட்சியின் ஆதரவும் உள்ளது. மக்களின் உத்தரவுக்கு மதிப்பு அளித்து எம்.எல்.ஏக்கள் தங்கள் மனசாட்சிப்படி நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story