சட்டசபையில் 101 சதவிதம் பெரும்பான்மையை நிரூபிப்போம் - எடியூரப்பா பேட்டி


சட்டசபையில் 101 சதவிதம் பெரும்பான்மையை நிரூபிப்போம் - எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 18 May 2018 3:16 PM GMT (Updated: 18 May 2018 3:16 PM GMT)

காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றால் எப்படி நாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்? என எடியூரபபா கேள்வியை எழுப்பி உள்ளார். #BSYeddyurappa

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 78 பேரும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 38 உறுப்பினர்களும் உள்ளனர். சுயேச்சைகள் 2 பேரும் உள்ளனர். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. பா.ஜனதாவுக்கு, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்தவர்களை வளைக்க முயற்சி செய்து வருகிறது. 

பெங்களூருவில் பா.ஜனதா தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்காக நாங்கள் விடுதியில் உள்ளோம். எங்களுக்கு முழு மெஜாரிட்டி உள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான பெரும்பான்மை உள்ளது. எங்களுடைய தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் நாங்கள் எப்படி பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்? நாங்கள் சட்டசபையில் வாக்கெடுப்பில் 101 சதவிதம் வெற்றிபெறுவோம், என கூறிஉள்ளார். 

Next Story