காஷ்மீரில் வணிக வளாகத்தில் தீ விபத்து; 7 பேர் காயம்


காஷ்மீரில் வணிக வளாகத்தில் தீ விபத்து; 7 பேர் காயம்
x
தினத்தந்தி 16 Sept 2018 6:12 PM IST (Updated: 16 Sept 2018 6:12 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் காயமடைந்து உள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா நகரில் ஊரி சந்தை பகுதியில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது.  இங்கு இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் தீ தடுப்பு மற்றும் அவசரகால சேவை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அவர்களுக்கு உதவியாக பொதுமக்களில் சிலரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இதில் தீயில் சிக்கி 7 பேர் காயமடைந்து உள்ளனர்.  லேசான காயமடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் 2 கடைகள் மற்றும் வீடு ஒன்றும் சேதமடைந்து உள்ளன.  தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story