டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்: இடதுசாரி அணி அமோக வெற்றி


டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்: இடதுசாரி அணி அமோக வெற்றி
x
தினத்தந்தி 17 Sept 2018 2:45 AM IST (Updated: 17 Sept 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அணி அமோக வெற்றிபெற்றது.

புதுடெல்லி,

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் 14-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் இடதுசாரி அணி வேட்பாளர்களும், ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிசத், காங்கிரஸ் ஆதரவு பெற்ற இந்திய தேசிய மாணவர் யூனியன் மற்றும் பிர்சா அம்பேத்கர் புலே மாணவர்கள் சங்கம் ஆகியவற்றின் வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் 67.8 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அதைத் தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. 4 முக்கிய பதவிகளையும் இடதுசாரி அணி வேட்பாளர்கள் கைப்பற்றினர்.

இந்த அணியின் சாய் பாலாஜி 2,692 ஓட்டு பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சரிகா சவுத்திரி (2,692 ஓட்டு) துணைத்தலைவராகவும், ஏஜஜ் அகமது (2,423 ஓட்டு) பொதுச்செயலாளராகவும், அமுதா (2,047 ஓட்டு) இணை செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1 More update

Next Story