அண்டைய நாடுகளுடன் எப்படி நடக்கவேண்டும் என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் -ராஜ்நாத் சிங்


அண்டைய நாடுகளுடன் எப்படி நடக்கவேண்டும் என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் -ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 17 Sep 2018 11:35 AM GMT (Updated: 2018-09-17T17:05:22+05:30)

அண்டைய நாடுகளுடன் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை பாகிஸ்தான் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் சர்வதேச எல்லையில் முக்கிய பகுதிகளில் வேலியமைக்கும் பணியை தொடங்கி வைத்த உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசுகையில், இந்தியாவுடனான அணுகுமுறையை பாகிஸ்தானில் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசு மாற்றிக்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இம்ரான்கான் தலைமையில் புதிய ஆட்சி தொடங்கியுள்ள நிலையில், அந்நாட்டு அரசின் செயல்பாடு எப்படி இருக்கும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு ராஜ்நாத் சிங் பதிலளிக்கையில், “பாகிஸ்தானிடம் இயற்கையாகவே எந்தஒரு மாற்றமும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அங்கு மாற்றம் நேரிட வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இதற்கு முன்னதாக இருந்த அரசைவிட சிறப்பான மாற்றமாக இருக்கும் என நம்புகிறேன்,” என கூறியுள்ளார்.

அண்டைய நாடுகளுடன் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை பாகிஸ்தான் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story