சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு சிவ்ராஜ்சிங் சவுகானை கேலி செய்த ராகுல்காந்தி


சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு சிவ்ராஜ்சிங் சவுகானை கேலி செய்த ராகுல்காந்தி
x
தினத்தந்தி 18 Sep 2018 5:50 AM GMT (Updated: 2018-09-18T11:20:06+05:30)

சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேலி செய்துள்ளார். #RahulGandhi

போபால், 

மத்தியபிரதேசத்தில் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு சென்றார். தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் வகையில், 15 கி.மீ. தூரத்துக்கு வாகன பேரணியாக சென்று மக்களை சந்தித்தார். பின்னர் மக்களிடையே அவர் பேசுகையில்,

”உங்கள் அனைவருக்கும் சச்சின் டெண்டுல்கரை பற்றித் தெரியும். அவர் எப்போது, எந்த இன்னிங்ஸில் விளையாடினாலும் குறைந்தது 50, 60, 70 அல்லது 100 ரன்களை உறுதியாக எடுப்பார். அதே போல் இங்கே ரன் இயந்திரம் என்றழைக்கப்படும் மத்திய பிரதேசத்தின் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இவரது அறிவிப்புகளும் சச்சின் டெண்டுல்கரின் ரன்கள் போன்றே உள்ளது. இதுவரை 21000 அறிவிப்புகளை அறிவித்துள்ளார். ஆனால், ஒன்றையும் செயல்படுத்தவில்லை. மத்திய பிரதேச மாநிலம் வேலையின்மை, பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் முதல் இடம் பெற்றிருக்கிறது. இதனால் உங்களுக்கு என்ன கிடைத்தது?” என ராகுல் காந்தி கூறினார்.

Next Story