திருமணம் செய்தது இந்தியாவில்; தலாக் கொடுத்தது வாட்ஸ் அப்பில் பெண்ணுக்கு நேர்ந்த கதி


திருமணம் செய்தது இந்தியாவில்; தலாக் கொடுத்தது வாட்ஸ் அப்பில் பெண்ணுக்கு நேர்ந்த கதி
x
தினத்தந்தி 19 Sept 2018 1:08 PM IST (Updated: 19 Sept 2018 1:08 PM IST)
t-max-icont-min-icon

ஓமனை சேர்ந்தவர் தனது மனைவியை வாட்ஸ் அப் மூலம் தலாக் கூறி விவகாரத்து செய்து உள்ளார்.

ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்  ஹூமா சாய்ரா ( வயது 29)  இவரது 62 வயது கணவர்  அவருக்கு வாட்ஸ் அப் மூலம் தலாக் கொடுத்து உள்ளார்.

2017 ம் ஆண்டு மே மாதம் ஐதராபாத்தில் ஓமன் ஷேக் கபீஸ் சயீத் அல் சல்பூபியை  திருமணம் செய்தார். 

சாய்ரா, ஒருவருடம் ஓமனில் அவருடன் வாழ்ந்ததாக கூறி உள்ளார். அவர் தன்னை தொடர்ந்து கொடுமைப்படுத்திய போதிலும் சகித்து கொண்டு வாழ்ந்ததாக கூறினார்.

சாய்ரா ஓமனில் தங்கியிருந்தபோது ஒரு குழந்தையை பெற்றெடுத்தார், ஆனால் மூன்று மாதங்களுக்குள் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டது.

குழந்தை இறந்த பிறகு, மேலும் பிரச்சினை அதிகமானது.  குழந்தை இறந்ததிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல கணவர்  ஷேக் கபீஸ் வற்புறுத்தி வந்தார். எனினும், சிறிது காலத்திற்குப் பிறகு, ஜூலை 30, 2018 அன்று தனது கணவரால் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.

விரைவில் ஓமனுக்கு அழைத்து கொள்வதாக கணவர் கூறி இருந்தார். இந்த நிலையில் ஆகஸ்ட் 12 ந் தேதி சாய்ராவுக்கு வாட்ஸ் அப் மூலம் தலாக் கொடுத்து  உள்ளார்.

இந்த விஷயத்தில் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உதவியை ஹுமா சாய்ரா கோரி உள்ளார்.

அவரது கணவர் தலாக் பற்றிய தனது தகவல்களையும்  கேள்விகளையும் புறக்கணித்துவிட்டதாக கூறுகிறார்.

சாய்ரா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறி இருப்பதாவது:- 

என் கணவருக்கு எதிராக போராட உதவுமாறு சுஷ்மா ஸ்வராஜை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த வகையான ஆட்கள் ஏழை பெண்களின்  வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொண்டு இப்படி செய்தால் எந்தவொரு சரியான ஆதரவும் இன்றி நான் எங்கே போகமுடியும்? அவர்கள் எங்களை போன்றவர்களை பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
1 More update

Next Story