முத்தலாக் தடுப்பு அவசர சட்டத்தில் செய்யப்பட்டுள்ள 3 திருத்தங்கள்

முத்தலாக் அவசர தடுப்பு சட்டத்தில் 3 திருத்தங்கள் செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி
முஸ்லிம்களிடையே முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறை இருந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து பாராளுமன்றத்தில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் இதை தாக்கல் செய்தார். ‘முத்தலாக்’ முறைக்கு தடை விதிக்கும் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதா’ மக்களவையில் நிறைவேறி விட்டது. மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் முத்தலாக் தடுப்பு அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 3 அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
முத்தலாக் தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள 3 திருத்தங்கள் வருமாறு:-
* முத்தலாக் தடுப்பு சட்டத்தில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம்
* முத்தலாக் வழங்கியபின் கணவன் மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேரலாம்
* முத்தலாக்கில் கணவன், மனைவியின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்கலாம்
Related Tags :
Next Story