பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேராயர் மூலக்கல் இரண்டாம் நாளாக விசாரணைக்குழு முன் ஆஜர்


பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேராயர் மூலக்கல் இரண்டாம் நாளாக விசாரணைக்குழு முன் ஆஜர்
x

பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேராயர் மூலக்கல் தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணைக்குழு முன் ஆஜரானார். #NunRapeCase

கொச்சின்,

கற்பழிப்பு விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார், புகார் குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பேராயருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதன்படி, நேற்று கொச்சியில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைக்கம் டி.எஸ்.பி.கே.சுபாஷ் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு முன் பேராயர் மூலக்கல், விசாரணைக்காக ஆஜர் ஆனார். அவரிடம் முதற்கட்டமாக 7 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி இன்று விசாரணைக்குழு முன் ஆஜரான பேராயர் மூலக்கலிடம், போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பேராயர் பிராங்கோ மூலக்கல் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை 25-ந்தேதி நடக்கிறது. அவரை கைது செய்வதற்கு எந்த தடையும் தற்போது இல்லை என்றாலும், 25-ந்தேதி வரை போலீசார் கைது நடவடிக்கையை எடுக்கமாட்டார்கள் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர்.
1 More update

Next Story