கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த பேராயர் பிராங்கோ பதவி நீக்கம் வாடிகன் அறிவிப்பு


கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த   பேராயர் பிராங்கோ பதவி நீக்கம் வாடிகன் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Sep 2018 12:14 PM GMT (Updated: 20 Sep 2018 12:24 PM GMT)

கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த புகாருக்கு ஆளான பேராயர் பிராங்கோவை வாடிகன் பதவி நீக்கம் செய்தது.


கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பேராயர் இருந்த பிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவர் அங்குள்ள கன்னியாஸ்திரியை 2014–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை 13 தடவை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

பிராங்கோ மூலக்கல் மீது இதுவரை தேவாலய நிர்வாகமும், போலீசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என போராட்டம் நடைபெற்றது. இப்போது சிறப்பு பிரிவு போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது, பேராயர் பிரான்கோ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை எனக்கு நீதி வேண்டும் என்று வாடிகனுக்கு கடிதம் எழுதினார். இதுபோன்று பிறரும் கத்தோலிக்க தலைமையகமான வாடிகனுக்கு புகார் கடிதம் எழுதினர். வாடிகனும் விசாரணையை மேற்கொள்கிறது.

இந்நிலையில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான பிராங்கோ தற்காலிகமாக அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைக்கப்படுவதாக வாடிகன் இன்று அறிவித்துள்ளது. டெல்லியில் கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

Next Story