சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: பெண் அதிகாரி உள்பட 4 பேர் சி.பி.ஐ. பிடியில் சிக்கினர்


சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: பெண் அதிகாரி உள்பட 4 பேர் சி.பி.ஐ. பிடியில் சிக்கினர்
x
தினத்தந்தி 21 Sept 2018 3:45 AM IST (Updated: 21 Sept 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

பீகார் மாநிலம் முசாபர்பூரில், மாநில அரசின் நிதி உதவியுடன் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வரும் காப்பகம் உள்ளது. அதில், மும்பை அமைப்பு நடத்திய ஆய்வில், 34 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

புதுடெல்லி,

தொண்டு நிறுவன அதிபர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மாநில சமூக நலத்துறை மந்திரி மஞ்சு வர்மா பதவி விலகினார். மாநில அரசு, இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது.

இந்நிலையில், பீகார் சமூக நலத்துறையில் 2015–ம் ஆண்டு முதல் 2017–ம் ஆண்டுவரை உதவி இயக்குனராக இருந்த ரோசி ராணி என்ற பெண் அதிகாரி, தொண்டு நிறுவன ஊழியர்கள் குட்டு, விஜய், சந்தோஷ் ஆகியோரை விசாரணைக்காக சி.பி.ஐ. அழைத்துச் சென்றுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் கூறியபோதிலும், ரோசி ராணி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று தெரிகிறது.

1 More update

Next Story