தேசிய செய்திகள்

அரசு பதவி உயர்வில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டியதில்லை - சுப்ரீம் கோர்ட் + "||" + Supreme Court says there is no need to collect data on SC/ST in reservation in promotion in government services

அரசு பதவி உயர்வில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டியதில்லை - சுப்ரீம் கோர்ட்

அரசு பதவி உயர்வில் எஸ்சி  எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டியதில்லை - சுப்ரீம் கோர்ட்
அரசு பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டியதில்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,

அரசு பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய கட்டாயமில்லை என்று கடந்த 2006-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் பின் தங்கிய நிலையில் இருப்பதற்கான தரவுகளை வழங்க வேண்டும் என்றும், அரசு பணியில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.


இந்த உத்தரவை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, மறுபரிசீலனை செய்யக் கோரி, மத்திய அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த சுப்ரீம்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தீர்ப்பை கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ஒத்திவைத்தது. இதையடுத்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அரசு பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றவேண்டியதில்லை. இந்த உத்தரவை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டிய  அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாங்கள் இந்த புகாரில் எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை: சுப்ரீம் கோர்ட் சிறப்பு அமர்வு
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை என சுப்ரீம் கோர்ட் சிறப்பு அமர்வு கூறி உள்ளது.
2. ஜாதி மதங்களை முன் வைத்து ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை : தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
ஜாதி மதங்களை முன் வைத்து ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை என தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
3. அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்
அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
4. டிடிவி தினகரன் மீதான பெரா வழக்கின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள பெரா வழக்கின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
5. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பான மறு சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம்கோர்ட் ஒத்திவைத்தது.