பிரதமரின் திட்டங்கள் இந்தியாவின் வேலைவாய்ப்புக்களை கொன்று வருகிறது மோடி மீது ராகுல் தாக்கு


பிரதமரின் திட்டங்கள் இந்தியாவின் வேலைவாய்ப்புக்களை கொன்று வருகிறது மோடி மீது ராகுல் தாக்கு
x
தினத்தந்தி 26 Sep 2018 6:41 AM GMT (Updated: 26 Sep 2018 6:41 AM GMT)

பிரதமரின் திட்டங்கள் இந்தியாவின் வேலைவாய்ப்புக்களை கொன்று வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

புதுடெல்லி,

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்கு மத்திய அரசும் பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்தநிலையில்,  இந்தியாவின் வேலைவாய்ப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி, ஹஃபிங்டன் போஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்  
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது எனக்குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்த அறிக்கை விபரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில்,  பிரதமரின் திட்டங்கள் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை கொன்று வருகிறது. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடெட் மூலம் ரூ.30,000 கொள்ளையடிக்கப்பட்டு, திறமையில்லாதவர்களிடம் போர் விமானம் தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் திறமையுள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த 20 ஆண்டுகளில் அதிக அளவிலான வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர் எனக்குறிப்பிட்டுள்ளார்.

Next Story