ஆதார் எண் எதற்கு கட்டாயம்! எதற்கு தேவை இல்லை? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம்

ஆதார் எண் எதற்கு கட்டாயம்! எதற்கு தேவை இல்லை? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் வெளியாகி உள்ளது
புதுடெல்லி,
ஆதாருக்கு எதிரான வழக்கு தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தது. வழக்கு விசாரணைக்கு இடையே கருவிழி, கைரேகை உள்ளிட்டவற்றை பகிர்வது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானதா? என்ற கேள்வி எழுந்தது.
அந்த விவகாரத்தை தனியாக விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனிமனித சுதந்திரம் என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.
அந்த தீர்ப்பின் அடிப்படையில் கருவிழி உள்ளிட்டவற்றை பகிர்வது தனிநபரின் அடிப்படை உரிமையை மீறும் செயலா? என்பது குறித்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கலாம். அதன் அடிப்படையில் ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசை அனுமதிப்பதா? இல்லையா? என்று முடிவு செய்யலாம் என்றும் 9 நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.
பின்னர் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடங்கியபோது, கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் அனைத்து சேவைகளும் பெற ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
அந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
வாரம் 3 நாள் விசாரணை என்ற அடிப்படையில் 38 நாட்கள் தொடர் விசாரணை நடந்தது. கடந்த மே மாதம் விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள் இறுதி தீர்ப்பு வரும் வரை வங்கி, தொலைபேசி சேவை உள்பட எதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்க கூடாது என்று இடைக் கால தடை விதித்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர் ஆகியோர் நீதிபதி ஏ.கே.சிக்ரி கருத்தில் உடன்பாடு
ஆதார் அடையாள அட்டை செல்லும் என அரசியல் சாசன அமர்வில் 5ல் 3 நீதிபதிகள் தீர்ப்பு அளித்து உள்ளனர்
3 நீதிபதிகளில் நீதிபதி ஏ கே சிக்ரி தீர்ப்பு அளித்தார்.
அதில் ஆதார் எதற்கு கட்டாயம் எதற்கு தேவை இல்லை என கூறபட்டு உள்ளது
தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கோருவது சட்டவிரோதம்.
நீட் சிபிஎஸ் சி தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கூடாது. ஆதார் இல்லை எனக்கூறி குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை மறுக்கக்கூடாது. கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதால் அதில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது
வங்கிக்கணக்குகளை தொடங்க, மொபைல் எண் பெற ஆதார் கட்டாயமில்லை.ஆதார் இல்லை என்பதற்காக தனி நபரின் உரிமைகள் மறுக்கபடக்கூடாது.
பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்.
அரசு சலுகைகள் பெற ஆதார் கட்டாயம்; அரசு சேவையை பெற ஆதார் கட்டாயம்
டெலிகாம் சேவைக்கு ஆதார் கார்டை இணைக்க வேண்டியது இல்லை.
Related Tags :
Next Story