40 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை வழங்கும் புதிய தொலை தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


40 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை வழங்கும் புதிய தொலை தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
தினத்தந்தி 26 Sep 2018 10:34 AM GMT (Updated: 2018-09-26T16:04:29+05:30)

40 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை வழங்கும் புதிய தொலை தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் குறைந்த விலைகளில் 5ஜி மற்றும் ஆப்டிகல் பைபர்கள் போன்ற நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்கும் நோக்கத்தினை புதிய தொலை தொடர்பு கொள்கை கொண்டுள்ளது.  இதற்கு தேசிய டிஜிட்டல் தொடர்பு கொள்கை 2018 என பெயரிடப்பட்டு உள்ளது.

இதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் தெரிவித்துள்ளது.  இந்த மசோதாவின்படி, கடனில் மூழ்கியுள்ள தொலை தொடர்பு பிரிவை புதுப்பிக்கும் வகையில் ஸ்பெக்ட்ரம் வரிகள் போன்ற வரிகளை எளிமைப்படுத்துவதற்கு உறுதி வழங்கப்பட்டு உள்ளது.

அனைவருக்கும் விநாடி ஒன்றுக்கு 50 மெகாபிட் வேகத்தில் பிராட்பேண்ட் சேவை, 5ஜி சேவை மற்றும் வருகிற 2022ம் ஆண்டிற்குள் 40 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த மசோதா உறுதி வழங்கியுள்ளது.

இந்த புதிய கொள்கையின்படி 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு முதலீட்டை ஈர்க்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.


Next Story