பெட்ரோல் டீசல் விலை உயர்வு, டீசல் விலை ரூ.80- ஐ தாண்டியது


பெட்ரோல் டீசல் விலை உயர்வு, டீசல் விலை ரூ.80- ஐ தாண்டியது
x
தினத்தந்தி 16 Oct 2018 12:59 AM GMT (Updated: 2018-10-16T06:29:07+05:30)

சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.80.04 க்கு விற்பனையாகிறது.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் வாகனங்களின் பயன்பாட்டினை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களை பயன்படுத்துவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை குறைந்தபாடில்லை. தினமும் உயர்ந்த வண்ணமே உள்ளது. இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 11 காசுகள் உயர்ந்து ரூ.86.10 -க்கும் , டீசல் 14 காசுகள் அதிகரித்து 80.04 ஆகவும் விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 80 ஐ தாண்டி இருப்பது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story