"கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் எந்த தடை மனுவையும் தாக்கல் செய்யாது": பினராயி விஜயன்


கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் எந்த தடை மனுவையும் தாக்கல் செய்யாது: பினராயி விஜயன்
x
தினத்தந்தி 16 Oct 2018 6:43 AM GMT (Updated: 2018-10-16T12:13:10+05:30)

"கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் எந்த தடை மனுவையும் தாக்கல் செய்யாது என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், 

சபரிமலை அய்யப் பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரளாவில் ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு முடிவு செய்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்பதை தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை என்று கூறியுள்ள திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு, கோவிலுக்கு வரும் பெண்களுக்கு போதிய வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் கூறி உள்ளது. இந்த போர்டுதான் கோவிலை நிர்வகித்து வருகிறது.

ஆனால், சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் முடிவுக்கு அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக கேரளாவில் இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்துகொள்கிறார்கள்.பந்தளம் அரச குடும்பத்தினரும், சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது கோவில் நடைமுறைக்கு எதிரானது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், “  கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் எந்த தடை மனுவையும் தாக்கல் செய்யாது என்று உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும்,  "சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவோம் என்றும் இந்து தலைவர்களுடன் முதலில் தேவசம் போர்டுகலந்தாலோசிக்கட்டும் என்று தெரிவித்த அவர், பாஜக தலைவர்கள் இந்த விவகாரத்தில் பிரச்சினையை ஏற்படுத்தாமல் இருந்தால், சுமூக தீர்வினை எட்டலாம் எனவும் தெரிவித்துள்ளார். 


Next Story