மீ டூ விவகாரம்: பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு குழுக்கள் அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி வேண்டுகோள்


மீ டூ விவகாரம்: பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு குழுக்கள் அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Oct 2018 7:59 PM GMT (Updated: 19 Oct 2018 7:59 PM GMT)

சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தங்களுடன் பணியாற்றும் சக ஆண் ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகள் தங்களுக்கு இழைத்த பாலியல் கொடுமைகளை ‘மீ டூ’ இயக்கம் மூலம் புகார் அளித்து வருகின்றனர்.

புதுடெல்லி, 

சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தங்களுடன் பணியாற்றும் சக ஆண் ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகள் தங்களுக்கு இழைத்த பாலியல் கொடுமைகளை ‘மீ டூ’ இயக்கம் மூலம் புகார் அளித்து வருகின்றனர். இது நாடு முழுவதும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த பாலியல் புகார்கள் அரசியல் துறையிலும் கிளம்பி இருப்பதால், அரசியலில் இருக்கும் பெண்களை பாதுகாக்க சிறப்பு குழுக்கள் அமைக்குமாறு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘அரசியல் கட்சிகள் தங்கள் அலுவலகங்களில், பெண்கள் உள்பட ஏராளமான பணியாளர்களை வேலையில் அமர்த்தி இருக்கின்றன. அங்கு பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்தி கொடுப்பது தனிச்சிறப்பான கடமை ஆகும். இதற்காக பாலியல் தொல்லை தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறப்பு குழுக்களை உருவாக்குமாறு தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்களை கேட்டுக்கொள்கிறேன்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story