சபரிமலைக்கு செல்ல முயன்ற இஸ்லாமிய மாடலிங் பெண் ரெஹானா பாத்திமா முஸ்லீம் கவுன்சிலில் இருந்து நீக்கம்


சபரிமலைக்கு செல்ல முயன்ற இஸ்லாமிய மாடலிங் பெண் ரெஹானா பாத்திமா முஸ்லீம் கவுன்சிலில் இருந்து நீக்கம்
x
தினத்தந்தி 21 Oct 2018 2:31 PM GMT (Updated: 2018-10-21T20:01:46+05:30)

சபரிமலைக்கு செல்ல முயன்ற இஸ்லாமிய மாடலிங் பெண் ரெஹானா பாத்திமா, கேரளா முஸ்லீம் கவுன்சிலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. பெண்கள் கோவிலுக்குள் செல்ல முடியாதபடி எதிர்ப்பாளர்களின் கூட்டம் அங்கே அதிகமாக உள்ளது. இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரான ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளர் கவிதா என்ற மற்றொரு பத்திரிகையாளருடன் வெள்ளிக்கிழமை சபரிமலை கோயிலுக்குள் இருமுடியுடன் செல்ல முயன்றார். போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்களை எதிர்ப்பாளர்கள் கடுமையாக எதிர்த்து திருப்பி அனுப்பினர். 

இந்தநிலையில், சபரிமலைக்கு செல்ல முயன்ற இஸ்லாமிய மாடலிங் பெண் ரெஹானா பாத்திமா, கேரளா முஸ்லீம் கவுன்சிலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக கவுன்சில் தலைவர் தெரிவிக்கையில், இந்துக்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தும் விதமாக செயல்பட்டதன் காரணமாக ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை கேரளா முஸ்லீம் ஜமாத்தில் இருந்து நீக்குவதாக அவர் அறிவித்தார்.

தொடர்ந்து ஏர்ணாகுளம் மத்திய முஸ்லீம் ஜமாத்தில் இருந்தும், அவரை நீக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.

Next Story