இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது


இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது
x
தினத்தந்தி 22 Oct 2018 6:31 AM GMT (Updated: 2018-10-22T12:01:15+05:30)

இமாசல பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

சிம்லா,

இமாசல பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் இன்று காலை 9.11 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் கின்னாரின் வடகிழக்கே 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  கின்னார் உள்பட பல்வேறு மலை பகுதிகள் தீவிர நிலநடுக்க மண்டல பகுதியில் வருகிறது.  இந்த பகுதிகளில் லேசான நடுக்கங்கள் ஏற்படுவது என்பது தொடர்ச்சியான ஒன்றாக உள்ளது.

Next Story