சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்ற விவகாரம் : பிஎஸ்என்எல் பணியாற்றும் பாத்திமா ரெஹானா இடமாற்றம்


சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்ற விவகாரம் : பிஎஸ்என்எல் பணியாற்றும் பாத்திமா ரெஹானா இடமாற்றம்
x
தினத்தந்தி 24 Oct 2018 7:07 AM GMT (Updated: 2018-10-24T12:37:02+05:30)

மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையில் (பிஎஸ்என்எல்) பணியாற்றிய சபரிமலை கோயிலுக்குள் இருமுடியுடன் செல்ல முயன்ற பாத்திமா ரெஹானா இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

கொச்சி, 

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. பெண்கள் கோவிலுக்குள் செல்ல முடியாதபடி எதிர்ப்பாளர்களின் கூட்டம் அங்கே அதிகமாக உள்ளது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரான ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளர் கவிதா என்ற மற்றொரு பத்திரிகையாளருடன் கடந்த  வெள்ளிக்கிழமை சபரிமலை கோயிலுக்குள் இருமுடியுடன் செல்ல முயன்றார். போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்களை எதிர்ப்பாளர்கள் கடுமையாக எதிர்த்து திருப்பி அனுப்பினர். 

இந்தநிலையில் சபரிமலைக்கு செல்ல முயன்ற இஸ்லாமிய மாடலிங் பெண் ரெஹானா பாத்திமா, கேரளா முஸ்லீம் கவுன்சிலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

ரெஹானா பாத்திமா  மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையில் (பிஎஸ்என்எல்)  கொச்சியில் பணியாற்றி வருகிறார். பாத்திமா, போர்ட் ஜெட்டி கிளை  ரவிபுரம் வாடிக்கையாளர் உறவு பிரிவில் பணியாற்றும் ஒரு தொலைத் தொழில்நுட்ப நிபுணர் ஆவார். தற்போது அவர் பாலாரிவட்டோம் பகுதிக்கு மாற்றப்பட்டு உள்ளார். பொது தொடர்பு தேவைப்படாத நகரத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். ஆனால் அவர் கடமையில் இருந்து தவறவில்லை என ஆதரங்கள் தெரிவித்து உள்ளது.

தான் 5 வருடங்களுக்கு முன் இங்கிருந்து மாற்றம் கேட்டேன்.  தற்போதுதான் அது கிடைத்து உள்ளது. கடவுளுக்கு நன்றி. இதனை நான் தண்டனையாக கருதவில்லை என பாத்திமா ரெஹானா கூறி உள்ளார்.

Next Story