சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் தொடர்புடைய லஞ்ச வழக்கில் இடை தரகருக்கு சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு


சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் தொடர்புடைய லஞ்ச வழக்கில் இடை தரகருக்கு சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 25 Oct 2018 1:40 PM GMT (Updated: 25 Oct 2018 1:40 PM GMT)

சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தொடர்புடைய லஞ்ச வழக்கில் இடை தரகர் மனோஜ் பிரசாத்தின் காவலை 5 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது தொழிலதிபர் சதீஷ் சனா லஞ்ச புகார் கூறினார்.  இதனை அடுத்து இந்த வழக்கில் ராகேஷ் மற்றும் போலீஸ் துணை சூப்பிரெண்டு தேவேந்தர் குமார் மீது சி.பி.ஐ. அமைப்பு எப்.ஐ.ஆர். பதிவு செய்தது.

இந்த வழக்கில் இடை தரகராக செயல்பட்ட மனோஜ் பிரசாத் மற்றும் சோமேஷ் பிரசாத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டு உள்ளன.  இந்த நிலையில், மனோஜ் பிரசாத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரி சி.பி.ஐ. அமைப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதுபற்றி விசாரணை மேற்கொண்ட டெல்லி நீதிமன்றத்தின் சிறப்பு சி.பி.ஐ. நீதிபதி சந்தோஷ் ஸ்நேஹி மான், மனோஜிற்கு 5 நாட்கள் சி.பி.ஐ. காவல் விதித்து உத்தரவிட்டார்.

Next Story