விவசாயிகளால் நாட்டை முன்னெடுத்து செல்ல முடியும் - பிரதமர் மோடி புகழாரம்


விவசாயிகளால் நாட்டை முன்னெடுத்து செல்ல முடியும் - பிரதமர் மோடி புகழாரம்
x
தினத்தந்தி 26 Oct 2018 10:47 AM GMT (Updated: 2018-10-26T16:17:59+05:30)

விவசாயிகளை யாரும் முன்னெடுத்து செல்ல முடியாது.ஆனால், விவசாயிகள் நாட்டை முன்னெடுத்து செல்ல முடியும் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

லக்னோ,

லக்னோவில் நடக்கும் கிரஷ் கும்பமேளாவை முன்னிட்டு வீடியோ கான்பரன்சிங் வழியாக பிரதமர் மோடி பேசியதாவது:

விவசாயிகளை யாரும் முன்னெடுத்து செல்ல முடியாது. ஆனால் விவசாயிகள் நாட்டை முன்னெடுத்து செல்ல முடியும். நாடு முழுவதும் 16 கோடி விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. 

உத்திரப்பிரதேச மாநில அரசு, உணவு தானியங்களை கொள்முதல் செய்வதில் கணிசமாக உயர்த்தி உள்ளது. 2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

இந்த சூழ்நிலையில், மத்திய அரசு  செலவினங்களைக் குறைக்கவும் லாபத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சூரிய மின்சக்தி குழாய்கள் நிறுவப்படும். 

பசுமைப் புரட்சிக்குப் பிறகு, இப்போது பால் உற்பத்தி, தேன் உற்பத்தி, கோழிப்பண்ணை மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றில் கவனம் செலுத்துப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story