‘ஆம் ஆத்மி’ அரசின் ஏற்பாட்டில் டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி இன்று நடக்கிறது


‘ஆம் ஆத்மி’ அரசின் ஏற்பாட்டில் டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 17 Nov 2018 4:30 AM IST (Updated: 17 Nov 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை சேர்ந்த பிரபல கர்நாடக சங்கீத பாடகர் டி.எம்.கிருஷ்ணா. இவர், கர்நாடக சங்கீதம், அனைத்து சாதி, மதத்துக்கும் சொந்தமானது என்று, குடிசைவாழ் மக்களிடமும் கர்நாடக சங்கீதத்தை கொண்டு சேர்த்தவர்.

புதுடெல்லி, 

‘மகசேசே’ விருது பெற்றுள்ளார் டி.எம்.கிருஷ்ணா. இந்துத்துவா குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவிப்பதால், சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

டெல்லியில் உள்ள நேரு பூங்காவில் டி.எம்.கிருஷ்ணாவின் கர்நாடக சங்கீத நிகழ்ச்சி இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சமூக வலைத்தளங்களில் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இந்திய விமான நிலையங்கள் ஆணையம், அதை ரத்து செய்தது.

இதற்கு பதிலடியாக, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, டி.எம்.கிருஷ்ணா நிகழ்ச்சியை நடத்த முன்வந்துள்ளது. டெல்லியில் பைவ் செசன்ஸ் கார்டனில் இன்று மாலை இந்நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு வருமாறு டெல்லி மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story