புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு "குடிநீர், பால் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது" தமிழிசை


புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், பால் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது தமிழிசை
x
தினத்தந்தி 18 Nov 2018 1:08 PM GMT (Updated: 18 Nov 2018 1:08 PM GMT)

புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு "குடிநீர், பால் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது" என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. புயல் பாதித்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 493 முகாம்களில் 2,49,083 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் பொதுமக்கள் குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். முகாம்களில் உள்ளவர்களுக்கும் உதவிகள் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

 பொதுமக்கள் போராட்டம் நடத்தும் சூழ்நிலையும் காணப்படுகிறது. மறுபுறம் தேவையான உதவிகளை செய்துக்கொடுக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கான பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

Next Story