லாலு பிரசாத் யாதவ் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல்


லாலு பிரசாத் யாதவ் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாக  மருத்துவர்கள் தகவல்
x
தினத்தந்தி 19 Nov 2018 11:46 AM IST (Updated: 19 Nov 2018 11:46 AM IST)
t-max-icont-min-icon

லாலு பிரசாத் யாதவ் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாட்னா, 

ரூ.900 கோடி மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் யாதவ், தற்போது  சிகிச்சைக்காக  ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா இன்ஸ்ட்யூட் ஆப் மெடிக்கல் சையின்சஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்காக லாலுவுக்கு அளிக்கப்பட்ட ஜாமினை நீட்டித்து ஜார்கண்ட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  கடந்த 2 முதல் 3 நாட்களாக சர்க்கரை நோயாளியான லாலு பிரசாத்தின் உடலில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவு திடீரென அதிகரித்து காணப்படுகிறது. மருந்துகள் கொடுக்கப்பட்டும் அவரது சர்க்கரை அளவு குறையவில்லை. அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறோம்” என்றார். 

உடல்நிலை மோசமடைந்ததால் சுயமாக எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையில் லாலு இருப்பதாகவும், தேவை ஏற்படும் பட்சத்தில் அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் எனவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஐ.ஆர்.சி.டிசி முறைகேடு வழக்கில், வரும் டிசம்பர் 20 ஆம் தேதி லாலு பிரசாத் யாதவ் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜர் படுத்த வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
1 More update

Next Story