மீ டூ விவகாரம் புகார் அளித்து கண்டுகொள்ளவில்லை என்றால் கோர்ட்டை அணுகலாம் - சுப்ரீம் கோர்ட்


மீ டூ விவகாரம் புகார் அளித்து கண்டுகொள்ளவில்லை என்றால் கோர்ட்டை அணுகலாம் - சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 19 Nov 2018 12:19 PM GMT (Updated: 2018-11-19T17:49:52+05:30)

மீ டூ விவகாரத்தில் புகார் அளித்து கண்டுகொள்ளப்படவில்லை என்றால் மட்டுமே கோர்ட்டை அணுக வேண்டும் சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது. #MeToo

புதுடெல்லி

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை மிரள வைத்த இந்த ‘மீ டூ’ இயக்கம் இந்தி பட உலகை உலுக்கி விட்டு இப்போது தமிழகத்திலும் ஊடுருவி உள்ளது.

‘மீ டூ’ இயக்கம் ஆண்களை பயமுறுத்தினாலும் செக்ஸ் கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் கவசம் என்கின்றனர் பெண் உரிமைக்கு போர்க்கொடி உயர்த்துபவர்கள்.

2017-ல் ஹாலிவுட்டுக்குள் இது நுழைந்த பிறகுதான் உலக அளவில் பிரபலத்துக்கு வந்தது.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டெய்ன் மீது 80-க்கும் மேற்பட்ட நடிகைகள் பாலியல் புகார் கிளப்பினார்கள். பல வருடங்களாக நடந்த அவரது பாலியல் அட்டூழியங்களை துணிச்சலாக பேச ஆரம்பித்தார்கள்.

மீ டூ இப்போது இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள பட உலகில் சூறாவளியாக சுழன்று பிரபலங்களை நிலைகுலையச் செய்து வருகிறது.

தமிழ் பட உலகில் முதலில் சுசிலீக்ஸ் முகநூல் பக்கம்தான் திரையுலகினரின் அத்துமீறல்களை அம்பலபடுத்தியது. முன்னணி நடிகர், நடிகைகள் இதில் சிக்கினார்கள்.

இப்போது தமிழ் பட உலகத்திலும் ‘மீ டூ’ புகுந்து பொங்க வைத்து இருக்கிறது. கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி சொன்ன குற்றச்சாட்டு அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

தொடர்ந்து அர்ஜூன் உள்பட பல நடிகர்கள் மீது புகார் கூறபட்டு உள்ளன.

மீ டூ விவகாரத்தில் பெண்கள் சம்பந்தப்பட்ட துறையிடம் முதலில் புகாரளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை கண்டுகொள்ளவில்லை என்றால் மட்டுமே சுப்ரீம் கோர்ட்டை  அணுகலாம் என சுப்ரீம் கோர்ட்  நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

மீ டூ  விவகரத்தில்  பாலியல் துஷ்பிரயோகம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்ய  போலீசுக்கு உத்தரவிடகோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

எம்.எல் ஷர்மா என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில்  மீடு விவகாரத்தில் குற்றம்சட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளை பதிவுசெய்து விசாரணையை நடத்துமாறு  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட கேட்டு கொண்டார். அந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. 

மீ டூ விவகாரத்தில் பெண்கள் சம்பந்தப்பட்ட துறையிடம் முதலில் புகாரளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை  கண்டுகொள்ளவில்லை என்றால் மட்டுமே சுப்ரீம் கோர்ட்டை  அணுகலாம் என சுப்ரீம் கோர்ட்  நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Next Story