டெல்லியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இரு பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு


டெல்லியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இரு பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு
x
தினத்தந்தி 20 Nov 2018 2:22 PM GMT (Updated: 2018-11-20T19:52:40+05:30)

புதுடெல்லியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இரு பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


புதுடெல்லி,


டெல்லியில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனையடுத்து பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகள் இவர்களாக இருக்கலாம் என புகைப்படம் ஒன்றை டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தானை சேர்ந்த இரு பயங்கரவாதிகள் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. புகைப்படத்தில் டெல்லி 360 கிலோ மீட்டர், பெரோஸ்பூர் 9 கிலோ மீட்டர் (பஞ்சாப்பில் உள்ளது) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் குறித்து தகவல் அறிந்தாலும், நேரில் பார்த்து இருந்தாலும் பாஹர்காஞ்ச் காவல் நிலையத்தை 011-23520787 அல்லது 011-2352474 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


Next Story