விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மும்பையை நோக்கி 20 ஆயிரம் விவசாயிகள் மாபெரும் பேரணி

மும்பையில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி 20 ஆயிரம் விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்துகின்றனர்.
மும்பை,
மராட்டியத்தில் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு நியாயமான ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தானேவில் இருந்து மும்பை நகரை நோக்கி மாபெரும் பேரணியை லோக்சாரஷ்ஷ் மோர்ச்சாவால் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பேரணியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணி தானேவில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மும்பை சோமாலியா மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. பேரணியில் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டு உள்ளனர்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேரணி ராஜேந்திர சிங் மற்றும் யோகேந்திர யாதவ் தலைமையில் நடைபெறுகிறது.
அதிகமான விவசாயிகள் மும்பை நகருக்குள் பேரணியாக வர உள்ளதால் நாளை நகரமே குலுங்கும் அளவிற்கு இந்த போராட்டம் அமையப்போகிறது.
கடந்த மார்ச் 11-ம் தேதி இந்திய கிஷான் சபா சார்பில் மும்பையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story