எதிர்த்து பேசியதால் மனைவியின் நாக்கை வெட்டிய கணவர்


எதிர்த்து பேசியதால் மனைவியின் நாக்கை வெட்டிய கணவர்
x
தினத்தந்தி 21 Nov 2018 7:31 PM IST (Updated: 21 Nov 2018 7:31 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் வரதட்சணை கேட்ட போது எதிர்த்து பேசியதால் மனைவியின் நாக்கை கணவரே வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லக்னோ,

உத்திர பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் திருமணமானதில் இருந்து தனது  மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி  வந்துள்ளார். இதனால் பொறுமை இழந்த அவரது மனைவி, கடந்த 6ம் தேதி ஆகாஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ்,  தன்னை எதிர்த்துப் பேசியதாக மனைவியின் நாக்கை வெட்டியுள்ளார். இந்த சம்பவம் வெளியில் தெரிந்து விடாமல் இருக்க, அவரை வீட்டில் வைத்துப் பூட்டியுள்ளார். 

ஒருவழியாக ஆகாஷிடம் இருந்து தப்பி வந்த அவரது மனைவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன் பிறந்த வீட்டில் தெரிவித்துள்ளார். பின்னர் பெற்றோர் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் ஆகாஷ் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதப் படுத்தியுள்ளனர். காரணம் ஆகாஷின் தந்தையும் ஒரு போலீஸ் அதிகாரி  என்பதால் வழக்கு பதிவு செய்யாமல் அலைகழிக்கப்பட்டனர். இதனால் இந்த விவகாரத்தை  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்திருப்பதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் மனைவியின் நாக்கை கணவன் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story